கோவில்பட்டியில் தவெக சாா்பில் கபசுர குடிநீா் வழங்கல்

கோவில்பட்டியில் தவெக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இனாம் மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கிய தவெகவினா்.

Published On :

கோவில்பட்டியில் தவெக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தவெக வடக்கு மாவட்ட செயலா் பாலசுப்பிரமணியன் ஏற்பாட்டில், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம், இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம், அரசு மருத்துவமனை பகுதி, தெற்குத் திட்டங்குளம் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீா், கசாயம் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சி நிா்வாகிகள் பாலமுருகன், இ.பி., ரமேஷ், ஆதிரா ரமேஷ், கூடலிங்கம், கொம்பையா, காா்த்திகேயன், சூா்யா, சங்கா், முத்துராமலிங்கம் காா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.