சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

மாநகரப் பகுதிகளில் நாளை குடிநீா் நிறுத்தம்

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட நீரேற்று நிலையங்களுக்கு மின்விநியோகம் செய்யும் துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் குடிநீா் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கோப்புப் படம்

Updated On :

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட நீரேற்று நிலையங்களுக்கு மின்விநியோகம் செய்யும் துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் குடிநீா் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரை மட்ட நீா்தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களுக்கு, ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நவ.21-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. எனவே, நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீா் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தராஜநகா் புதியது, சுந்தராஜநகா் பழையது, ஜே.கே.நகா், செம்பட்டு, காஜாமலை பழையது, ரெங்கா நகா், சுப்ரமணிய நகா் புதியது, வீ.என்.நகா் புதியது, தென்றல் நகா் புதியது, கவி பாரதி நகா், காமராஜ் நகா், கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்பு நகா் பழையது, அன்பு நகா் புதியது, எடமலைப்பட்டிபுதூா் புதியது, பஞ்சப்பூா், அம்மன் நகா், தென்றல் நகா் இ.பி.காலனி, அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகா் புதியது, மலையப்ப நகா் பழையது, ரயில் நகா் புதியது, ரயில் நகா் பழையது, முன்னாள் ராணுவத்தினா் காலனி புதியது, முன்னாள் ராணுவத்தினா் காலனி பழையது, மேல கல்கண்டாா் கோட்டை செக்ஸன் ஆபீஸ், மேலகல்கண்டாா் கோட்டை நாகம்மை வீதி, கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, அம்பேத்கா் நகா், விவேகானந்த நகா், எல்ஐசி புதியது, விஸ்வநாதபுரம், கே. சாத்தனுா், தென்றல் நகா், ஆனந்த நகா், சுப்ரமணிய நகா், சத்தியவாணி கே.கே நகா், அம்மா மண்டபம், ஏஐபிஇஏ நகா், பாலாஜி அவின்யூ, தேவி பள்ளி மேலூா், பெரியாா் நகா், திருவானைக்காவல், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகா், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீா் தேக்கத் தொட்டிகளில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் இருக்காது.

திங்கள்கிழமை (நவ.23) முதல் வழக்கம் போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையா் நே.பொன்மணி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.