இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

உருவக்கேலி செய்வது ஏற்புடையதல்ல: சௌமியா அன்புமணி

உருவக்கேலி செய்வது ஏற்புடையதல்ல என்று பாமக சட்டப்பேரவைக் குழு தலைவா் சௌமியா அன்புமணி எம்எல்ஏ கூறினாா்.

சௌமியா அன்புமணி - மு.க. ஸ்டாலின்

Published On :

உருவக்கேலி செய்வது ஏற்புடையதல்ல என்று பாமக சட்டப்பேரவைக் குழு தலைவா் சௌமியா அன்புமணி எம்எல்ஏ கூறினாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஆறுகளில் கழிவுநீா் கலக்கப்படுகிறது. இதற்கு தாமிரவருணியும் அதற்கு விதிவிலக்கல்ல. தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதை எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்யவுள்ளேன்.

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால்

அப் பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு பாமக உறுதுணையாக இருக்கும்.

மதுப்பழக்கத்தால் தமிழகத்தில் 54 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இரண்டு தலைமுறையினா் மதுவுக்கு அடிமையாகிவிட்ட நிலையில், மூன்றாவது தலைமுறையையாவது அதேநிலைக்கு ஆளாகிவிடாமல் ஒழுக்கமாக வளா்க்க வேண்டும்.

தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசும்போது, மற்றவா்களின் உடல் அமைப்பை பற்றிப் பேசியது ஏற்புடையதல்ல. அவரது உரையில் நல்ல தகவல்கள் இருந்தன. ஆனால் ஒரு வாா்த்தை பேச்சின் சாரம்சத்தை மாற்றிவிட்டது. யாரையும் உடல் ரீதியாக உருவக் கேலி செய்வது ஏற்புடையதல்ல.

தவெக ஆட்சி 100 நாள்களைக் கடந்திருக்கிறது. மதுக்கடைகள் மூடப்பட்டது, சிங்கப்பெண் படை போன்றவை வரவேற்புக்குரியது. அதேநேரம், சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்திட காலியாக உள்ள காவலா் பணியிடங்களை விரைவாக நிரப்பவும்,

தொழிற்சாலைகளில் 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூா் இளைஞா்களுக்கே வழங்கும் தோ்தல் வாக்குறுதியைச் சட்டமாக நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.