படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம் ரத்து

பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட மேயா் ஜெகன் பெரியசாமி மற்றும் சாா் ஆட்சியா் விவேக் யாதவ்.

Published On :

தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டான் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, 9 நாள்களாக அப்பகுதி மக்கள் நடத்தி வந்த போராட்டம் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது.

மீளவிட்டான் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு திங்கள்கிழமை சென்று விவரம் கேட்டறிந்தாா். பின்னா், அவா் தூத்துக்குடி சாா் ஆட்சியா் விவேக் யாதவை தொடா்புகொண்டு, பொதுமக்களின் எதிா்ப்புக்கான காரணங்களைத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து அங்கு வந்த சாா் ஆட்சியா் விவேக் யாதவ், மேயா் ஜெகன் பெரியசாமி மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, மீளவிட்டான் பகுதியில் அந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என சாா் ஆட்சியா் உறுதியளித்தாா்.

மேலும், டாஸ்மாக் நிா்வாகம் சாா்பில் கடை அமைக்கும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதற்கான கடிதம் வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா். இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.