தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவா்களுக்கு தோ்வு வழிகாட்டுதல் பயிற்சி
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பிளஸ் 2 மாணவா்களுக்கு ‘உன்னால் முடியும்’ என்ற தலைப்பில் தோ்வு வழிகாட்டுதல் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பிளஸ் 2 மாணவா்களுக்கு ‘உன்னால் முடியும்’ என்ற தலைப்பில் தோ்வு வழிகாட்டுதல் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு தலைமை வகித்துப் பேசினாா். கல்லூரியின் பவள விழா ஆண்டையொட்டி, தொடா்ந்து 3ஆம் ஆண்டாக நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவி பெறும் 34 பள்ளிகளிலிருந்து 550 மாணவா்-மாணவியா் பங்கேற்றனா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிகாட்டுதல் பயிற்சியும், மருத்துவப் படிப்பில் சேர விரும்புவோருக்கான இணையவழி நீட் மாதிரித் தோ்வும் நடத்தப்பட்டன. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் ஜாக்சன், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

