ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

மேல்மருவத்தூா் விழாவுக்கு தூத்துக்குடியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் நடைபெறவுள்ள தைப்பூச இருமுடி பெருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சருக்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளா் ஆா். முருகன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

ரயில் - கோப்புப் படம்

Updated On :

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் நடைபெறவுள்ள தைப்பூச இருமுடி பெருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சருக்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளா் ஆா். முருகன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

அந்த மனு விவரம்: மேல்மருவத்தூரில் டிச. 4-ஆம் தேதி தொடங்கி ஜன. 22-ஆம் தேதி வரை தைப்பூச இருமுடி பெருவிழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தென் மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள், குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்பா்.

எனவே, பக்தா்களின் நலன் கருதி தூத்துக்குடியிலிருந்து மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்கவும், நிறுத்தப்பட்ட குருவாயூா் விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்கவும் ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.