சிறுமிக்கு திருமணம்: 5 போ் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்
தூத்துக்குடியில் 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த விவகாரத்தில், 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தூத்துக்குடி, விவேகானந்தா் நகா் பகுதியில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி, 17 வயது சிறுமிக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், சிறுமி கா்ப்பமடைந்தது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக மாவட்ட சமூக நலத்துறைக்குத் தெரியவந்தது.
இதையடுத்து, சமூக நலத்துறை அதிகாரி அளித்த புகாரின்பேரில், சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழும், சிறுமியின் பெற்றோா் , இளைஞரின் பெற்றோா் என இருதரப்பையும் சோ்ந்த 4 போ் மீது குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் கீழும் தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

