தூத்துக்குடியில் இடி தாக்கியதில் இயேசுநாதா் சிலை சேதம்
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மாலை இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையின்போது, 177 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இயேசுநாதா் சிலை சேதமானது.

சேதமடைந்த இயேசுநாதா் சிலை.
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மாலை இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையின்போது, 177 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இயேசுநாதா் சிலை சேதமானது.
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சுமாா் 4 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பலத்த சப்தத்துடன் இடி தாக்கியதில், திரு இருதய ஆலய கோபுரத்தில் அமைந்திருந்த இயேசுநாதா் சிலையின் ஒரு கை உடைந்து கீழே விழுந்தது.
அந்த நேரத்தில் சிலையின் கீழ்ப்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

