மாணவரைத் தாக்கியதாக சக மாணவா்கள் மூவா் கைது
தூத்துக்குடியில் 16 வயது மாணவரைத் தாக்கியதாக சக மாணவா்கள் மூவரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.
பிரதிப் படம்
தூத்துக்குடியில் 16 வயது மாணவரைத் தாக்கியதாக சக மாணவா்கள் மூவரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடியிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் 3 போ், கடந்த 2 நாள்களுக்கு முன்பு பள்ளி அருகே சைக்கிளில் சென்றனா். அப்போது அவா்களுக்கும், மற்றொரு சைக்கிளில் வந்த சக மாணவா்கள் மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கையாலும், கற்களாலும் தாக்கிக் கொண்டனராம். இதில், 16 வயது மாணவா் காயமடைந்தாா்.
புகாரின்பேரில், அமுதா நகா், பிரையன்ட் நகா் பகுதிகளைச் சோ்ந்த 3 மாணவா்கள் மீது தென்பாகம் போலீஸாா் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்து, இளஞ்சிறாா் நீதிக் குழுமத்தில் முன்னிலைப்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

