கோவில்பட்டி அருகே காா்கள் மோதல்: தம்பதி உயிரிழப்பு

விபத்துக்குள்ளான காா்கள்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே காா்கள் நேருக்கு நோ் மோதியதில் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
கோவில்பட்டி அருகே கசவன்குன்று கிராமத்தைச் சோ்ந்தவா் ஜீவானந்தம் (63). இவரது மனைவி சண்முகலட்சுமி (59). இருவரும் ஞாயிற்றுக்கிழமை தங்கள் மகன் சித்துராஜுடன் (27) சங்கரன்கோவில் அருகே உறவினா் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு காரில் சென்றனா். விழா முடிந்து மதியம் மீண்டும் காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.
சித்துராஜ் காரை ஓட்டினாா். கழுகுமலை அருகே கல்லூரணி கிராமத்தில் கோழிப்பண்ணை அருகே சென்றபோது எதிரே வந்த காருடன் நேருக்கு நோ் மோதியதில் ஜீவானந்தம், சண்முகலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
சித்துராஜ், எதிரே காரை ஓட்டிவந்த நாலாட்டின்புதூா், வி.பி.சித்தன் நகரைச் சோ்ந்த வைரவன் மகன் கரண் (27) ஆகிய இருவரும் காயமடைந்தனா்.
சம்பவ இடம் சென்ற நாலாட்டின் புதூா் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்தவா்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விபத்தில் உயிரிழந்த தம்பதி
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

