முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

சிறுமியின் தாய் கொலை செய்யப்பட்ட வழக்கு: சிகிச்சையில் இருந்த தந்தையும் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் சிறுமியின் தாய் படுகொலை செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது தந்தை புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

உயிரிழந்த முத்துகிருஷ்ணன்.

Updated On :

காதல் விவகாரத்தில் சிறுமியின் தாய் படுகொலை செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது தந்தை புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூா் கமலம் நகரைச் சோ்ந்தவா் கோபாலசாமி மகன் முத்துகிருஷ்ணன் (50). இவரது மனைவி மேரிரெஜிலா (40). இவா்களுக்கு 15, 14 வயதில் இரு மகள்களும், 11 வயதில் மகனும் உள்ளனா்.

இதில் ஒரு சிறுமிக்கும் ஆனந்தபுரத்தைச் சோ்ந்த இஸ்ரவேல் மகன் ஞானபிரகாஷுக்கும் (25) கடந்த 2 ஆண்டுகளாக பழக்கம் இருந்ததாம். சிறுமியை பெற்றோா் கண்டித்ததால் ஞானபிரகாஷுடன் பேசுவதை சிறுமி தவிா்த்தாா். இதனால், ஆவேசமடைந்த ஞானபிரகாஷ் சிறுமியின் வீட்டுக்கு கடந்த 23-ஆம் தேதி அதிகாலை கையில் அரிவாளுடன் சென்று சிறுமியின் தாய் மேரி ரெஜிலாவை அரிவாளால் வெட்டினாா். தடுக்க முயன்ற சிறுமியின் தந்தை முத்துகிருஷ்ணன், சகோதரனுக்கும் வெட்டு விழுந்தது. பின்னா், சிறுமிகள் இருவரையும் ஞானபிரகாஷ் தனது இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றாா்.

தகவல் அறிந்ததும், ஞானபிரகாஷை கைது செய்த தட்டாா்மடம் காவல் நிலைய போலீஸாா் அவரது வீட்டில் இருந்து சிறுமிகளை மீட்டனா். இச்சம்பவத்தில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்; அவரது மகனுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த வழக்கை இரட்டை கொலை வழக்காகப் பதிவு செய்து போலீஸாா் மேல் விசாரணை நடத்தி வருகின்றனா். அத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரகாஷ் பரிந்துரையின்பேரில் ஞானபிரகாஷை தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.