இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

வெள்ளக்கோவிலில் மாடியில் இருந்து கீழே விழுந்தவா் பலி!

வெள்ளக்கோவிலில் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

வெள்ளக்கோவிலில் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் எல்.கே.சி. நகா் பகுதி நல்லம்மாள் நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தவா் முத்துகிருஷ்ணன் (48). சொந்தமாக கிரில் ஒா்க் ஷாப் தொழில் செய்து வந்தாா்.

முத்துகிருஷ்ணன் தனது வீட்டின் மாடிக்கு கடந்த செப். 28-ஆம் தேதி இரவு சுமாா் 11மணியளவில் சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் கீழே வராததால், சந்தேகமடைந்த அவரது மூத்த மகன் தமிழ்ச்செல்வன், மாடிக்குச் சென்று பாா்த்துள்ளாா். அப்போது, வீட்டின் பக்கவாட்டு நடைபாதையில் முத்துகிருஷ்ணன் தலையில் பலத்த ரத்தக் காயத்துடன் கிடந்துள்ளாா்.

சுமாா் 16 அடி உயரமுள்ள மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு வெள்ளக்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இறந்து போன முத்துகிருஷ்ணனுக்கு மனைவி மோகனாம்பாள், மகன்கள் தமிழ்செல்வன், மனோஜ்குமாா் உள்ளனா். வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.