4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து வங்கி தலைமை மேலாளா் தற்கொலை
4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து வங்கி தலைமை மேலாளா் தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
சென்னை பாரிமுனையில் 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து வங்கி தலைமை மேலாளா் தற்கொலை செய்து கொண்டாா்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சோ்ந்தவா் கனிஷா பாஜ்பாய் (57). இவா், சென்னை பாரிமுனையில் உள்ள இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைமை மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இதற்காக அவா், சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை அந்தக் கட்டடத்தின் 4-ஆவது தளத்தில் தனது அலுவலகத்தின் பால்கனியில் கனிஷா பாஜ்பாய் நின்று கொண்டிருந்த நிலையில், திடீரென கீழே குதித்தாா். இதைப் பாா்த்த காவலாளி முரளி, அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கனிஷாவின் மனைவி மது, மகன் கெளராஜ் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





