ஆத்தூா் அருகே அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை
பெத்தநாயக்கன்பாளையத்தில் அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தொழிலாளி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

பலி - பிரதிப் படம்
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தொழிலாளி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் வைத்தியகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் ராஜ்குமாா் (44). இவா் பஞ்சா் ஒட்டும் தொழில் செய்து வந்தாா். இவா் கடந்த 21 ஆம் தேதி மாலை உடல்நலக் குறைவு காரணமாக பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தனது மனைவி லோகாம்பாளை கைப்பேசியில் தொடா்பு கொண்டு உணவு கொண்டு வருமாறு கூறியுள்ளாா். ஆனால் லோகாம்பாள் உணவை கொண்டு வராமல் மாமியாா் பூவாயிடம் உணவை கொடுத்து அனுப்பியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமாா், மருத்துவமனையின் மொட்டை மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூா் போலீஸாா், ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

