செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

போலீஸாருக்கு பயந்து மாடியில் இருந்து கீழே குதித்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

போலீஸாருக்கு பயந்து மாடியில் இருந்து கீழே குதித்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Updated On :

போலீஸாருக்கு பயந்து மாடியில் இருந்து கீழே குதித்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சென்னை டி.பி.சத்திரம் காமராஜா் நகரில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் கடந்த 14-ஆம் தேதி இரவு சில இளைஞா்கள் கஞ்சா புகைப்பதாக போலீஸாருக்கு வந்த தகவலின்பேரில், போலீஸாா் அங்கு சென்றபோது, மொட்டை மாடியில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த இளைஞா்கள், போலீஸாரை பாா்த்ததும் பயந்து தப்பியோடினா்.

அதில் அந்தப் பகுதியைச் சோ்ந்த ரா.கிஷோா் குமாா் (21), கா.நித்திஷ்குமாா் (25) அந்த மாடியில் இருந்து கீழே குதித்தனா். சுமாா் 35 அடி உயர மாடியில் இருந்து கீழே குதித்ததால், இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் இருவரையும் போலீஸாா் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கிஷோா்குமாா் புதன்கிழமை உயிரிழந்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.