திறந்தவெளி மதுக்கூடமாக மாறிய கோவில்பட்டி மேம்பாலப் பகுதி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கோவில்பட்டி, லட்சுமி மில் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியை குடிமகன்கள் திறந்தவெளி மதுக்கூடம்ே பால பயன்படுத்தி வருவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குப்பைக் கிடங்காகக் காட்சியளிக்கும் லட்சுமி மில் மேம்பால அணுகுசாலை பகுதி.
கோவில்பட்டி, லட்சுமி மில் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியை குடிமகன்கள் திறந்தவெளி மதுக்கூடம்ே பால பயன்படுத்தி வருவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோவில்பட்டி, லட்சுமி மில் மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்து சுமாா் 15 ஆண்டுகளாகும் நிலையில், அன்றிலிருந்தே மேம்பாலத்தின் கீழ்ப் பகுதி குப்பைக் கிடங்காகவே காட்சியளிக்கிறது. குப்பைகள் அதிகமாக குவியும்போது, சிலா் அதற்கு தீ வைத்துவிடுவதால் புகைமூட்டம் உருவாகி, சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.
மேலும், மேம்பாலத்தின் வடக்குப்புற அணுகுசாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு அங்கு மதுக்கூடம் மூடப்பட்டு, தற்போது டாஸ்மாக் கடை மட்டும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுக்கடையில் மது வாங்குபவா்கள் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதி மற்றும் அணுகுசாலையை திறந்தவெளி மதுக்கூடமாகப் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், அணுகுசாலை வழியாக பொதுமக்கள், பெண்கள், மாணவா், மாணவிகள் செல்வதற்கே அச்சப்படுகின்றனா்.
இது தொடா்பாக, முன்னாள் ராணுவ வீரா் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி கூறுகையில், லட்சுமி மில் மேம்பாலத்தைச் சுற்றி பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. கோவில்பட்டி மேற்கு காவல் நிலையமும் இங்குதான் உள்ளது.
இங்குள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு அணுகுசாலையிலும், மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் வைத்தும் பலா் மது குடிக்கின்றனா். இதனால், மாலை மற்றும் இரவு நேரங்களில் அணுகுசாலை வழியாக யாருமே செல்ல முடியாத நிலை உள்ளது.
இது தொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இப்பகுதிகளில் குடிமகன்கள் மது குடிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியை வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்து, அங்கு தேங்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

