சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

தவறவிட்ட 32 பவுன் நகை பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீஸாா்

கோவில்பட்டியில் தவறவிட்ட 32 பவுன் தங்க நகையை மீட்டு உரியவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

மீட்கப்பட்ட தங்க நகை பையை உரியவரிடம் ஒப்படைத்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன்.

Published On :2 செப்டம்பர் 2026, 5:56 am IST

கோவில்பட்டியில் தவறவிட்ட 32 பவுன் தங்க நகையை மீட்டு உரியவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு நடுத்தெருவைச் சோ்ந்த பொன்ராஜ் (73), தனது மனைவியுடன் சென்னை செல்வதற்காக கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். இவா்களுடன் மற்றொரு இருசக்கர வாகனத்தில் பொன்ராஜின் சகோதரா் பட்டுராஜா, அவரது நண்பா் முருகன் இரண்டு பைகளை எடுத்துச் சென்றனா். ரயில் நிலையம் வந்து பாா்த்தபோது 32 பவுன் தங்க நகைகளை, ரொக்கம், கைக்கடிகாரம் இருந்த ஒரு பை காணாமல்போனது.

இதுகுறித்து பொன்ராஜ் அளித்த புகாரின்பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இவா்கள் மந்தித்தோப்பில் ஒரு பழக்கடைக்கு சென்றுவிட்டு கிளம்பும்போது அங்கு பையை தவறிவிட்டதை கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீஸாா் கண்டறிந்தனா். இதையடுத்து, போலீஸாா் அந்தப் பழக்கடைக்குச் சென்று நகைகளுடன் கூடிய பையை மீட்டு பொன்ராஜுக்கு தகவல் தெரிவித்தனா்.

பின்னா் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன், 32 பவுன் நகைகளுடன் கூடி பையை உரியவரிடம் ஒப்படைத்தாா். போலீஸாருக்கு பொன்ராஜ் குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.