சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! 2ஆவது டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா பதிலடி காங்கிரஸ் இல்லையென்றால் தவெக கதையை அமித்ஷா முடித்திருப்பார்: மாணிக்கம் தாகூர்இன்னும் 2 ஆண்டுகளில் அறிவாலயம் வாடகைக்கு விடப்படும்: நிர்மல்குமார்ஆவணி சுபமுகூர்த்த நாள்: வாழை இலைக் கட்டு விலை கடும் உயர்வுஅமெரிக்காவின் பொருளாதாரப் போரில் பங்கேற்கும் நாடுகள் எதிரிகளே: ஈரான் திட்டவட்டம்வங்காள விரிகுடாவில் 22 பேருடன் மூழ்கிய சரக்கு கப்பல்: தேடுதல் பணி தீவிரம்

ஜம்மு: ரயிலில் தவறவிட்ட ரூ.25,000 அடங்கிய பையை மீட்டு பயணியிடம் ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகர்!

ஜம்முவில் பயணி தவறவிட்ட பையை மீட்டு ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு....

Passenger Leaves Bag Containing Rs 25,000 On Train In Jammu, Staff Returns It

கோப்புப்படம்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:03 pm IST

ஜம்முவில் ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.25,000 அடங்கிய பையை மீட்டு பயணியிடம் ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகரைப் பலர் பாராட்டியுள்ளனர்.

ஜம்முவின் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா ரயில் நிலையத்தில் கடநத் ஆகஸ்ட் 21ஆம் தேதி பயணி ஒருவர் தனது பையை விட்டுச் சென்றதாக ரயில்வே கட்டுப்பாடு அறைக்குத் தகவல் வந்துள்ளது. தகவல் கிடைத்ததும டிக்கெட் பரிசோதகர் தினேஷ் குமார், உடனடியாக அந்தப் பெட்டிக்கு விரைந்து சென்று யாருமற்ற அந்தப் பையைப் பாதுகாத்தார்.

பின்னர் பயணியின் தொடர்பு விவரங்களைக் கண்டறிந்து அவருக்குத் தகவல் தெரிவித்தார். அந்தப் பையில் பணமும் முக்கியமான ஆவணங்களும் இருப்பதை அந்தப் பயணியும் உறுதிப்படுத்தினார். பையில் ரூ.24,980 ரொக்கம் மற்றும் ஆதார் கார்டு, அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவை பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டது.

உரிய சரிபார்ப்பிற்குப் பின் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்காக அந்தப் பை ரயில்வே பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. தனது பொருட்கள் திரும்பக் கிடைத்ததில் நெகிழ்ந்துபோன பயணி, ஜம்மு கோட்டத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தச் செயலைப் பாராட்டிய ஜம்மு கோட்ட மூத்த கோட்ட வணிக மேலாளர், பயணிகள் தங்கள் லக்கேஜ்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், ஏதேனும் உதவிக்கு ரயில்வே ஊழியர்களை அணுகுமாறும் அல்லது 139 என்ற உதவி எண்ணை அழைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

Summary

Jammu: It could have been a story of loss and despair for a passenger who left his bag behind at Katra station. But it turned into a story of honesty and hope, as Jammu Division's railway staff went the extra mile to return his cash and documents intact.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.