2ஆவது டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா பதிலடி காங்கிரஸ் இல்லையென்றால் தவெக கதையை அமித்ஷா முடித்திருப்பார்: மாணிக்கம் தாகூர்இன்னும் 2 ஆண்டுகளில் அறிவாலயம் வாடகைக்கு விடப்படும்: நிர்மல்குமார்ஆவணி சுபமுகூர்த்த நாள்: வாழை இலைக் கட்டு விலை கடும் உயர்வுஅமெரிக்காவின் பொருளாதாரப் போரில் பங்கேற்கும் நாடுகள் எதிரிகளே: ஈரான் திட்டவட்டம்வங்காள விரிகுடாவில் 22 பேருடன் மூழ்கிய சரக்கு கப்பல்: தேடுதல் பணி தீவிரம்

மும்பையில் 22 அடி உயர விநாயகர் சிலை சரிந்து விழுந்து விபத்து: 2 பேர் பலி

மும்பையில் விநாயகர் சிலை சரிந்து விபத்துக்குள்ளானது பற்றி....

Huge Ganesh idol falls during arrival ceremony in Mumbai, 2 dead

விபத்து நடந்த இடம்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:04 pm IST

மும்பையில் பேரணியாகக் கொண்டுவரப்பட்ட 22 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலை சரிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முன்னதாக, பேரணியாகக் கொண்டுவரப்பட்ட 22 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலை சனிக்கிழமை இரவு திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

தெற்கு மும்பையின் பூலேஷ்வர் பகுதியில் விநாயகர் சிலையை எடுத்துச் சென்றபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்ததும் தீயணைப்புத் துறையினர், காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிராவில் செப்டம்பர் 14 அன்று தொடங்கவுள்ள 10 நாள் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக பிரம்மாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு, வாத்திய இசையுடன் விமர்சையாக விநாயகர் சிலைகள் கொண்டுவரப்படும் சூழலில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

A tragic incident unfolded in south Mumbai as a massive Ganesh idol collapsed during its arrival ceremony, resulting in two fatalities and five injuries, just weeks before the grand Ganeshotsav festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.