முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தும் முன்னாள் அமைச்சர்கள்- அமைச்சர் ரமேஷ்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அமைச்சர் ரமேஷ் பேட்டி அளித்திருப்பது பற்றி....

MInister Ramesh

தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் - TN Assembly

Published On :

சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர்கள் சிலர் தகாத வார்த்தைகளைப் பேசுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறேன் என சட்டப்பேரவை உறுப்பினர் கே.என் நேரு கூறுவது மகிழ்ச்சியாக இருந்தாலும், பல இடங்களில் பொது மக்கள் ரேஷன் அரிசியை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அதனையெல்லாம் சரிசெய்து தரமான பொருட்களை வழங்க முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். திமுககாரர்கள் பக்கம் கேமராவை திருப்பினால் எப்படி ரிலீஸ் போடமுடியும் என்பது மக்களுக்கு தெரியும், முதன்முறையாக சட்டப்பேரவை வந்த உறுப்பினர்கள் நாங்கள் மாண்புடன் கருத்துக்களை முன்வைக்கிறோம். மக்கள் பிரச்னை பற்றி முன்வைக்கிறோம். எதிர்த்தரப்பின் கருத்துக்கும் பதில் சொல்லுகிறோம்.

ஆனால் இவர்கள் எழுந்து நின்று கூச்சல் போடுவதும், வரிக்கு வரி கூச்சல் போடுவதும், கத்துவது, ஓடுவது மற்றும் அமைச்சர்கள் பேசும்போது முன்னாள் அமைச்சர்கள் பின் வரிசையில் அமர்ந்து கொண்டு தகாத வார்த்தைகளில் பேசுவது என்று சட்டப்பேரவையைச் சண்டை நடத்தும் இடமாக மாற்ற செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு முதலில் மாண்பு இருக்கிறதா என்பது தெரிய வேண்டும்.

நாங்கள் ஏதேனும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை. ஜனநாயக முறைப்படி நடைபெறும் சட்டப்பேரவையில் அனைவருக்குமான கேள்விக்கு பதிலளிக்கப்பட்டு, சில வார்த்தைகள் இருந்தால் அதை நீக்குவது மரபு, கடந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்பது தெரியும், அதனால் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க மாட்டீர்கள்.

இந்த ஆட்சியில் ஜனநாயகம் முக்கிய பங்காற்றுகிறது என்பதால் இதுபோன்று நேரிடுகிறது. பேரவைத் தலைவர் அவரது பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார் என்றார்.

Summary

Minister Ramesh has accused some former ministers of using inappropriate/abusive language in the Legislative Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.