வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்: பெ. சண்முகத்தின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - அமைச்சர் ரமேஷ்

பெ. சண்முகத்தின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் ரமேஷ் பதிலளித்திருப்பது பற்றி....

Minister Ramesh

அமைச்சர் ரமேஷ் - கோப்புப் படம்

Published On :

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வது தொடர்பாக சிபிஎம் செயலாளர் பெ. சண்முகம் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று அமைச்சர் ரமேஷ் தெவித்துள்ளார்.

ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கர்ப்பிணி பெண்கள் 240 பேருக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது. பெண்களுக்காக ஏராளமான திட்டங்களை முதல்வர் விஜய் செய்து வருகிறார். குறிப்பாக வெற்றிப் பயணம் திட்டம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வரை 2, 052 மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள்களுக்கு முன்பு வரை திருச்சி மாவட்டம் அந்த திட்டத்தில் முதலாவது இடத்தில் உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது தவெக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசினார். ஆனால் இன்று ஆட்சியில் அமர்ந்துள்ளோம். இடைத்தேர்தல் குறித்து ஒவ்வொருவரும் ஆருடம் கூறுவது போல் கூறி வருகிறார்கள். அனைத்து மக்களும் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள். தவெக வேட்பாளர் செல்லும் இடங்களில் எதிர்க்கட்சிகள், சிலரை தயார் செய்து எதிர்ப்பு தெரிவிக்க வைக்கிறார்கள்.

ஆனால் மக்கள் இடைதேர்தலில் தவெகவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளார்கள். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வது தொடர்பாக சிபிஎம் செயலாளர் பெ. சண்முகம் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை. நாங்கள் பணம், ஜாதியை வைத்து தேர்தலில் நிற்கவில்லை மக்களை நம்பிதான் சட்டப்பேரவைத் தேர்தலிலேயே போட்டியிட்டோம். நேர்மையாகதான் இடைத்தேர்தலையும் சந்திக்கிறோம்.

நாங்கள் டிபன் பாக்ஸ், பணம் விநியோகம் செய்ததற்கான ஆதாரம் இருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள். நேர்மையாக சந்திப்பதால் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் முன்னாள் முதல்வர் நாங்கள் பிரசாரம் செய்வதை முடக்கினார். அதனால் எங்களால் அப்போது அதிக இடங்களுக்கு சென்று பிரசாரம் செய்யும் முடிய வில்லை. தற்போது நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். அனைத்து இடங்களுக்கும் சென்று பிரசாரம் செய்ய எங்களால் முடிகிறது.

மக்களை முதல்வர் கிராமம் கிராமமாக சென்று சந்திக்கிறார். மக்களைச் சந்தித்தாலும் உங்களுக்குப் பிரச்னையாக உள்ளது. சந்திக்காவிட்டாலும் உங்களுக்குப் பிரச்னையாக உள்ளது என்றால் தவறு உங்களிடம்தான் உள்ளது. வேறு கட்சியிலிருந்து தவெகவில் இணைந்தவர்களுக்கும் ஏற்கெனவே தவெகவில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். தேவையில்லாத குழப்பங்களை யாரும் உருவாக்க வேண்டாம் என்றார்.

Summary

Minister Ramesh has stated that the allegation made by CPM Secretary P. Shanmugam regarding the distribution of money to voters is baseless.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.