கேரள முதல்வர் மீது அமைச்சர்கள் அதிருப்தியா? ரமேஷ் சென்னிதலா விளக்கம்!
கேரள முதல்வர் மீது அமைச்சர்கள் அதிருப்தியில் உள்ளதாக வெளிவந்த தகவல்களுக்கு உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா அளித்த விளக்கம் குறித்து...

கேரள முதல்வர் வி.டி. சதீசன் - கோப்புப்படம்
கேரள முதல்வர் வி.டி. சதீசன் மீது அமைச்சர்கள் அதிருப்தியில் உள்ளதாக வெளிவந்த தகவல்களுக்கு உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா வியாழக்கிழமை (நவ. 19) விளக்கமளித்தார்.
கேரள அமைச்சரவைக் கூடட்தின்போது, முதல்வர் வி.டி. சதீசனின் செயல்பாடுகள் குறித்து சில அமைச்சர்கள் அதிருப்தி தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து ரமேஷ் சென்னிதலா பேசியதாவது:
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துகள் உண்டு. அந்தக் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் இருக்க வேண்டும். காங்கிரஸ் ஒரு ஜனநாயகக் கட்சி என்பதால் அதன் முடிவுகள் அனைவருடைய கருத்துகளுக்கும் மதிப்பளித்த பின்னரே எடுக்கப்படுகின்றன. இதுதான் கட்சியின் நடைமுறை.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக அனைவருடனும் அதுகுறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்று, காங்கிரஸ் செயல்படுவதில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில், காலை 9 மணிக்கு கட்சி அலுவலகத்துக்கு அழைக்கப்படுவார்கள். அங்கு அன்றைய முதல்வர் தனது கருத்தைத் தெரிவிப்பார். மற்ற அனைவரும் அமைதியாக இருந்து அதைக் கேட்க வேண்டும். அது அவர்களுடைய நடைமுறை.
காங்கிரஸில், ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் வெளிப்படையாகத் தெரிவிக்கும் சுதந்திரம் உண்டு. அந்த சுதந்திரத்தை மதித்து, கலந்துரையாடல்கள் மூலமாகத்தான் நாங்கள் நேற்றைய முடிவுகளுக்கு வந்தோம் என்று அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.
Summary
On Thursday (Nov. 19), Home Minister Ramesh Chennithala provided a clarification regarding reports that ministers were dissatisfied with Kerala Chief Minister V.D. Satheesan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


