எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்றுமுதல் தொடக்கம் விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

அண்ணாமலையார் கோயிலில் அமைச்சர்கள் ஆதவ், ரமேஷ் - பத்திரிகையாளர்கள் இடையே வாக்குவாதம்

அண்ணாமலையார் கோயிலில் அமைச்சர்கள் ஆதவ், ரமேஷ் - பத்திரிகையாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது குறித்து...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் - கோப்புப் படம்

Updated On :

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ரமேஷுடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வருகிற நவம்பர் 15 ஆம் தேதியில் தீபத் திருவிழா தொடங்கவுள்ள நிலையில், கோயிலில் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், ஆய்வின்போது கோயிலுக்குள் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சர்கள் கூறியதால் அமைச்சர்களுடன் பத்திரிகையாளர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆய்வுக்காக அமைச்சர்களுடன் 10 பேர் வரையில் கோயிலுக்குள் சென்றதாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டினர்.

அதுமட்டுமின்றி, ஆதவ் அர்ஜுனாவின் உதவியாளர் ஒருவர் இஸ்லாம் மதத்தின் தொப்பியை அணிந்து உள்ளே சென்றதாகவும், மத அடிப்படையில் எவ்வாறு உள்ளே செல்லலாம் என்றும் கோயில் நிர்வாகிகள் சிலர் கேள்வி எழுப்பினர். கோயிலுக்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாம்; ஆனால், வேறு மதத்தை பிரதிபலிக்கும் வகையில் செல்லக் கூடாது என்றும் கூறினர்.

அமைச்சர்களுடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதம் செய்ததால் கோயில் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Summary

Journalists get into an argument with Ministers Adhav Arjuna and Ramesh at the Annamalaiyar Temple in Tiruvannamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER