திருவண்ணாமலையில் தீப தரிசனம் செய்த பிக் பாஸ் பிரபலங்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிக் பாஸ் பிரபலங்கள் சாமி தரிசனம் செய்தது குறித்து...

Bigg Boss celebrities divya ganesan aathirai poornima witness the Deepam in Tiruvannamalai

பிக் பாஸ் திவ்யா கணேசன், பூர்ணிமா, ஆதிரை - இன்ஸ்டாகிராம்

Updated On :

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிக் பாஸ் பிரபலங்களான திவ்யா கணேசன், ஆதிரை, பூர்ணிமா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

அடிக்கடி கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள திவ்யா கணேசன், இம்முறை கார்த்திகை தீபத்தையொட்டி தனது நண்பர்களுடன் அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்றுள்ளார்.

அங்கு தங்கியிருந்து கிரிவலப் பாதையில் இருந்தவாறு தீப தரிசனம் செய்துள்ளார். அண்ணாமலையாரையும் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பாக கோயிலுக்குள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

கோயிலுக்குள் செல்போன்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், கோயிலுக்குள் புகைப்படங்கள் எடுத்தது எப்படி என்று ரசிகர்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள திவ்யா கணேசன், இம்முறை நண்பர்களுடன் சேர்ந்து சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன.

Summary

Bigg Boss celebrities divya ganesan aathirai poornima witness the Deepam in Tiruvannamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.