நடிகை என் மனைவியாவாள் என்று நினைக்கவில்லை: இயக்குநர் ஜெய்னு ஜெய்

நாங்கள் கணவன் - மனைவியாவோம் என்று நினைக்கவில்லை என்று இயக்குநர் ஜெய்னு ஜெய் தெரிவித்துள்ளது குறித்து...

I never imagined the actress would become my wife: actress akshaya's husband Director Jainu Jai

நடிகை அக்‌ஷயா உடன் இயக்குநர் ஜெய்னு ஜெய் - இன்ஸ்டாகிராம்

Updated On :

நாங்கள் கணவன் - மனைவியாவோம் என்று நினைக்கவில்லை என்று சின்ன திரை நடிகை அக்‌ஷயாவின் கணவர் ஜெய்னு ஜெய் தெரிவித்துள்ளார்.

இணை இயக்குநராக இருந்தபோது குஷ்பு நடித்த தொடரில் குஷ்புவுக்கு மகளாக அக்‌ஷயா நடித்திருந்தார். அத்தொடரிப் படப்பிடிப்பில் பூஜையின்போது அக்‌ஷயாவின் அருகில் இருக்கும் புகைப்படத்தை இயக்குநர் ஜெய்னு ஜெய் பகிர்ந்து இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெய்னு ஜெய் பதிவிட்டுள்ளதாவது:

''2021 பிப்ரவரி 14 அன்று எடுத்த புகைப்படம் இவை. நாங்கள் கணவன் - மனைவி ஆவோம் என்று ஒருபோதும் அன்று நினைக்கவில்லை. குஷ்பு மேடம் நடித்த தொடரில் நான் இணை இயக்குநர். அதில் குஷ்புவின் 4 மகள்களில் ஒருவராக அக்‌ஷயா நடித்திருந்தார். இப்போது நங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்.

வாழ்க்கை முழுவதுமே இன்ப அதிர்ச்சிகளாலும் ஆச்சரியங்களாலும் நிறைந்துள்ளது'' எனப் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் ஜெய்னு ஜெய்க்கும் நடிகை அக்‌ஷயாவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் நடைபெற்றது.

விஜய் தொலைக்காட்சியில் 2023 மார்ச் முதல் 2025 அக்ரோபர் வரை ஆஹா கல்யாணம் தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரில் நடிகை அக்‌ஷயா கந்தமுதன் நாயகியாக நடித்திருந்தார்.

நடிகை அக்‌ஷயா உடன் இயக்குநர் ஜெய்னு ஜெய்

நடிகை அக்‌ஷயா உடன் இயக்குநர் ஜெய்னு ஜெய் - இன்ஸ்டாகிராம்

இதில், மகாலட்சுமி என்ற பாத்திரத்தில் அக்‌ஷயா நடித்து அசத்தியிருந்தார். தனது உணர்வுப்பூர்வமான நடிப்பாலும் வசீகரமான தோற்றத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்த அக்‌ஷயா, சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர்.

சமீபத்தில் தனது கணவருடன் தலை தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். சமீபத்தில் இருவரும் இணைந்து கார் வாங்கியிருந்தனர். சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

I never imagined the actress would become my wife: actress akshaya's husband Director Jainu Jai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.