ரயில் தாமதம்: திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்!
ரயில் தாமதத்தால் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது குறித்து...

ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் காவல் துறை - எக்ஸ்
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
ரயில் தாமதமாக வந்ததால் கூட்ட நெரிசல் அதிகரித்தது. அவர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை மீது இன்று மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்திருந்தனர்.
இன்று மாலை மலை மீது தீபம் ஏற்றப்பட்டதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் ஜோதி வடிவத்தை தரிசனம் செய்தனர்.
பிறகு பக்தர்கள் பலரும் ஒரே நேரத்தில் புறப்பட்டதால் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதுமட்டுமின்றி 45 நிமிடங்களுக்கு ரயில் தாமதமாக வந்ததாலும் கூட்டம் அதிகரித்தது.
விழுப்புரம் - திருவண்ணாமலை, திருப்பதி - திருவண்ணாமலை என திருவண்ணாமலை மார்க்கமாக இன்று 35 ரயில்கள் இயக்கப்பட்டன.
முன்னெச்சரிக்கையாக பக்தர்கள் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கத்திலும் ரயில் நிலையத்திற்குள் பக்தர்கள் செல்ல இரண்டு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. இருந்தபோதும் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது.
ரயில் நிலையத்திற்கு வெளியேயும் பயணிகள் ரயில் டிக்கெட் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
Summary
Train delay Crowding at Tiruvannamalai railway station
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


