திருவண்ணாமலை கோயிலில் பரணி தீபம் ஏற்றம்: மாலை மகாதீபம்!
அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது பற்றி..

அதிகாலை கோயில் மூலவா் சன்னதியில் ஏற்றப்பட்ட பரணி தீபம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்குப் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று 24-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கருவறைக்கு எதிரில் பரணி தீபம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று மாலை 2668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற காா்த்திகை தீப திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடந்து வருகிறது.
கோயிலில் வண்ண மின்விளக்குகள் மற்றும் மலர் அலங்காரங்களால் கைலாயம் போல் காட்சி அளிக்கிறது. மகா தீபத் திருவிழாவைத் தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருவதால் நகரம் முழுவதும் விழாக் கோலமாகக் காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

