திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!தமிழக ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி!26 நாள்களுக்குப் பிறகு தொடங்கிய உதகை மலை ரயில் சேவை; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

நவ.30 வரை ஜெட்டா,ரியாத், தம்மாம், மதீனா நகரங்களுக்கான இண்டிகோ விமான சேவை ரத்து

பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு, சவூதி அரேபிய நகரங்களுக்கான இண்டிகோ விமான சேவை ரத்து குறித்து...

IndiGo cancels flights to Jeddah, Madinah, Riyadh and Dammam until November 30

இண்டிகோ விமானங்கள் ரத்து - கோப்புப்படம்

Updated On :

பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு, சவூதி அரேபிய நகரங்களுக்கான விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம் தொடா்ந்து ரத்து செய்து வருகின்றன.

சவூதி அரேபியாவில் ஏராளமான இந்தியா்கள் பணியாற்றி வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு, சவூதி அரேபியாவின் ஜெட்டா, ரியாத், தம்மாம் மற்றும் மதீனா ஆகிய நான்கு நகரங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் தனது அனைத்து விமான சேவைகளையும் நவம்பர் 30 வரை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விமான நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட தொடர்பு விவரங்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பே தங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளா்ச்சி அமைப்பினா், தெற்கு சவூதி அரேபியாவை நோக்கி ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணையை சவூதி தலைமையிலான கூட்டணி இடைமறித்து அழித்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் பாதுகாப்புக் கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சவூதி அதிகாரிகள் தென்மேற்குப் பகுதியில் உள்ள அப்ஹா நகரம் மற்றும் கமிஸ் முஷைத் ஆகிய பகுதிகளுக்கு அவசரகால எச்சரிக்கைகளை விடுத்திருந்தனர், ஆனால் ஆபத்து நீங்கிய பின்னர் அவை திரும்பப் பெறப்பட்டன.

இந்த ரத்து நடவடிக்கைகள் நவம்பர் 30 வரை அமலில் இருக்கும் என்று இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெட்டா, ரியாத், தம்மாம் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களை நவ.14 வரை ரத்து செய்வதாக, ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ நிறுவனங்கள் சில நாள்களுக்கு முன்னா் அறிவித்திருந்தது.

சவூதியில் உள்ள இந்தியா்கள் விழிப்புடன் செயல்படவும், வான்வழித் தாக்குதல் நடக்கும்போது தங்குமிடங்களிலேயே இருக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

IndiGo has cancelled all its flights to and from four major Saudi Arabian cities, Jeddah, Madinah, Riyadh and Dammam until November 30, in view of the prevailing security situation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.