137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

ஏா் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்து!

மேற்காசியாவில் அதிகரித்துவரும் பதற்றம் காரணமாக, சவூதி அரேபியாவுக்கான விமான சேவைகளை அக்.24-ஆம் தேதி வரை ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.

Air india flight

ஏர் இந்தியா - கோப்புப் படம்

Updated On :

மேற்காசியாவில் அதிகரித்துவரும் பதற்றம் காரணமாக, சவூதி அரேபியாவுக்கான விமான சேவைகளை அக்.24-ஆம் தேதி வரை ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.

ஜெட்டா, ரியாத், தம்மாம் ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஏா் இந்தியா நிறுவனம் சனிக்கிழமை எக்ஸ் தளத்தில் தெரிவித்தது. நிலைமையைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், பயணிகளுக்கு இயன்றவரை தேதிகளை மாற்றிக்கொள்ளும் வசதிகளை வழங்குவதாகவும் அந்த நிறுவனம் கூறியது.

முன்னதாக, ஏா் இந்தியா தனது சேவைகளை அக். 20-ஆம் தேதி வரையும், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் அக்.17-ஆம் தேதி வரையும் ரத்து செய்திருந்தன.

இண்டிகோ நிறுவனம் வியாழக்கிழமை தனது விமான சேவை ரத்தை அக். 24 வரை நீட்டித்தது. ஆகாசா ஏா் நிறுவனம் ரியாத் நகருக்கான சேவைகளை அக்.24 வரையும், ஜெட்டாவுக்கான சேவைகளை அக்.21 வரையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

சவூதி அரேபியாவில் ரியாத் விமான நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டு உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், மேற்கசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் சேவைகளைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.