பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

சவூதி அரேபியா செல்லும் இண்டிகோ விமானங்கள் ரத்து அக். 31 வரை நீட்டிப்பு!

சவூதி அரேபியா செல்லும் இண்டிகோ விமானங்கள் ரத்து அக். 31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பது பற்றி...

இண்டிகோ - ANI

Updated On :

மேற்காசியாவில் அதிகரித்துவரும் பதற்றம் காரணமாக, சவூதி அரேபியாவுக்கான விமான சேவைகளை அக்.31 வரை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது.

முன்னதாக, அக்.24 வரை விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘சவூதி தலைநகா் ரியாத்துக்கான இண்டிகோ விமானங்கள் அக்.31 வரை ரத்து செய்ப்படுகின்றன. ஜெட்டா மற்றும் தம்மாம் நகரங்களுக்கான இண்டிகோ விமானங்கள் அக்.27 வரை ரத்து செய்யப்படுகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

தம்மாம் நகர விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியா் உள்பட இருவா் உயிரிழந்தனா். மேலும் இரு இந்தியா்கள் உள்பட 8 போ் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, இந்த அறிவிப்பை இண்டிகோ வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே ஜெட்டா, ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான விமான சேவைகளை அக்.24 வரை ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.

Summary

IndiGo flights to Saudi Arabia cancelled, extended until Oct. 31

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.