9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: எல்லையைக் கோட்டைவிட்டு வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!

எல்லையோர சோதனைச் சாவடிகளை கண்காணிக்கத் திராணியின்றி தவெக அரசு கும்பகர்ணத் தூக்கம் குறித்து...

Vijay | Nainar Nagenthran

விஜய் | நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :

எல்லையைக் கோட்டைவிட்டு வேடிக்கை பார்க்கும் தவெக ஆட்சியில் இன்னும் என்னென்ன அவலங்கள் அரங்கேறப்போகிறதோ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:

கும்பகர்ண தூக்கத்தில் தவெக அரசு

தென்காசி மாவட்டத்தின் விவசாய நிலங்களிலும் திறந்தவெளிகளிலும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து டன் கணக்கில் கொண்டுவரப்படும் அபாயகரமான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. 'கேரள மாநில விற்பனைக்கு மட்டும்' என்று அச்சிடப்பட்ட பாட்டில்களும் நச்சுக் கழிவுகளும் கண்முன்னே ஆதாரமாகக் கிடந்தும், எல்லையோரச் சோதனைச் சாவடிகளைக் கண்காணிக்கத் திராணியின்றி முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கும்பகர்ண தூக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

கேரள எல்லைக்குள் கொட்டிவிட முடியுமா?

இதேபோன்று ஒரு குண்டூசி அளவிலான கழிவுப் பொருளைக்கூடத் தமிழகத்திலிருந்து கொண்டுபோய்க் கேரள எல்லைக்குள் கொட்டிவிட முடியுமா? அங்கு அந்த அளவிற்குச் சோதனைகளும் கண்காணிப்பும் மிகக் கடுமையாக உள்ள சூழலில், அண்டை மாநிலத்தின் நச்சுக் கழிவுகளை இங்கு கொட்டும் அளவிற்குத் தமிழகக் காவல்துறையும், தவெக அரசும் இத்தனை அலட்சியமாக இருக்கிறது! இது தென்காசியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த எல்லையோர மாவட்டங்களிலும் தொடர்கிறது. பசுமையான நிலங்களை நஞ்சாக்கித் தமிழகத்தைக் கேரளாவின் குப்பைத் தொட்டியாக மாற்றும் இந்த ஆட்சியில், இன்னும் என்னென்ன கூத்துகளும் அவலங்களும் அரங்கேறப் போகின்றனவோ தெரியவில்லை!

வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்

எனவே, இனியாவது இந்த மெத்தனப் போக்கைக் கைவிட்டு, கேரள முதல்வரிடம் பேசி இந்த விவகாரத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எல்லையோரச் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, கேரளக் கழிவுகளைத் தமிழகத்திற்குள் கடத்திவரும் வாகனங்களை உடனடியாகப் பறிமுதல் செய்வதோடு, மக்களின் சுகாதாரத்தோடு விளையாடும் சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Medical waste from Kerala being dumped in Tamil Nadu: The TVK government leaves the border unguarded and merely looks on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.