9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண் பலி: உறவினர்கள் சாலை மறியல்!

சீர்காழி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதைப் பற்றி...

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள். உள்படம்: சிவசங்கரி.

Updated On :

சீர்காழி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மேல மாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் சுரேஷ். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர்களுக்கு ஆறு வயதில் மற்றும் ஒன்றை வயதில் என இரண்டு மகன்கள் உள்ளனர். சிவசங்கரி நேற்று நள்ளிரவில் செரிமான பிரச்சனையால் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரது கணவர் சிவசங்கரியை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே இரவு பணியில் இருந்த மருத்துவர் பரிசோதித்து ஊசி செலுத்தியதாக தெரிகிறது.

இதனிடையே மருத்துவமனையில் இருந்த சிவசங்கரிக்கு சில மணி நேரத்தில் உடல்நிலை மோசமாகியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவர் வந்து பரிசோதனை செய்தபோது சிவசங்கரி இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் இதுகுறித்து தனது உறவினர்களுக்கு தகவல் அளித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

இந்த நிலையில், சிவசங்கரிக்கு உரிய நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்காமல் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் இறந்துவிட்டதாகக் கூறி அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து காலை 10 மணி அளவில் இறந்த சிவசங்கரியின் உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், மாவட்டச் செயலர் தாமு இனியவன் தலைமையில் கச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

சாலை மறியலின் போது உயிரிழந்த சிவசங்கரி குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தகவல் அறிந்த சீர்காழி டிஎஸ்பி சரவணன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாமல் மறியல் தொடர்ந்தது. பின்னர் சீர்காழி தாசில்தார் ரவிச்சந்திரன், காவல்துறையினர் மீண்டும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தி அவரது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக உறுதியளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

சுமார் 30 நிமிடம் மேலாக பள்ளி நேரத்தில் பிரதான நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் பள்ளி மாணவ -மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

Summary

Relatives staged a protest, alleging that a woman had died at the Sirkazhi Government Hospital due to improper medical treatment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER