குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

மும்பையில் நிலச்சரிவு! 6 பேர் பலி, மீட்புப் பணிகள் தீவிரம்!

மும்பையின் ஏற்பட்ட நிலச்சரிவு பற்றி..

News image

மும்பையில் நிலச்சரிவு - X

Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:42 pm IST

மும்பையின் காட்கோபர் பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. முத்லில், இருவர் பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிராக் நகரின் அசோக் நகர்ப் பகுதியில் உள்ள கௌஷியா சால் பகுதியில் அதிகாலை 3.48 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மலைப்பகுதியிலிருந்து சரிந்து விழுந்த மண் மற்றும் இடிபாடுகள் அங்கிருந்த மூன்று வீடுகளின் மீது விழுந்ததால் உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக பிரஹன்மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகலாக இருப்பதால் (ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும்), கனரக இயந்திரங்களைப் பயன்படுத்துவது கடினமாக உள்ளது. இதனால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சவால்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடிபாடுகளிலிருந்து இதுவரை ஆறு உடல்கள் மீட்கப்பட்டு ராஜாவாடி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காயமடைந்த சோஹேல் அன்சாரி (18) மற்றும் முகமது அன்சாரி (14) ஆகிய இருவரும் குர்லாவில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான பாபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீயணைப்புத் துறை, காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அடங்கிய குழுக்கள் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மும்பை மேயர் ரிது தாவ்டே மீட்புப் பணிகளை மேற்பார்வையிடச் சம்பவ இடத்திற்கு வருகை தந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் உடனடி நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக தலா ரூ. 50,000 நிதியுதவியும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

நிர்வாகம் நிலைமையையும், நடைபெற்று வரும் மீட்புப் பணிகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

Two persons were killed and as many others injured after a landslide in Mumbai's Ghatkopar area early on Wednesday following heavy rain, civic officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.