குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

அமாவாசை முடிந்த பிறகே கர்நாடக அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு!

அமாவாசை நிறைவடைந்த பிறகே கர்நாடகத்தின் புதிய அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கப்படும் எனத் தகவல்...

News image

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - (கோப்புப்படம்)

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:33 am IST

கர்நாடகத்தில், முதல்வர் டி.கே. சிவகுமார் அரசின் புதிய அமைச்சர்களுக்கு அமாவாசை நிறைவடைந்த பின்னரே துறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதல்வராகப் பதவி வகித்து வந்த சித்தராமையா கடந்த மே மாதம் ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 3 ஆம் தேதி கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்றுக் கொண்டார். இருப்பினும், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதிதான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை (ஆக. 12) அமாவாசையின் தாக்கங்கள் நிறைவடைந்த பின்னரே முதல்வர் சிவகுமார் தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்துடன், புதன்கிழமை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது உண்மையில் ஜோதிட ரீதியான நம்பிக்கையா அல்லது துறை ஒதுக்கீட்டை மேலும் தாமதப்படுத்துவதற்கான யுக்தியா என்று அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும், கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் வியாழக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இன்று நள்ளிரவுக்கு மேல் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டால், பேரவையில் எழுப்பப்படும் துறைகள் குறித்த கேள்விகளுக்கு உரிய விளக்கம் கிடைக்குமா எனச் சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக, கர்நாடகத்தின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாஜக மற்றும் ஜனதா தளம் இடையே முக்கிய முடிவுகள் மற்றும் நிகழ்வுகளுக்கு சுப முகூர்த்தத்தைப் பின்பற்றும் வழக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Reports indicate that portfolios will be allocated to the new ministers of Karnataka only after the *Amavasya* (new moon) period concludes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.