
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: சிறுவன் உள்ளிட்ட 4 போ் கைது
கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளி அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கு தொடா்பாக 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளி அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கு தொடா்பாக 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி இந்திரா நகா் முதல் தெருவைச் சோ்ந்த செண்பகம் மகன் சுடலைமுத்து (46). கட்டடத் தொழிலாளி. இவரது மகன் கருப்பசாமிக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் கரணுக்கும் (23) இடையே முன்விரோதம் இருந்ததாம். ஞாயிற்றுக்கிழமை கரண் உள்ளிட்ட சிலா் சுடலைமுத்துவின் வீடு புகுந்து, அவதூறாகப் பேசி கையால் தாக்கி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினராம். இதில், காயமடைந்த சுடலைமுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கரண், 17 வயதுச் சிறுவன், அதே பகுதியைச் சோ்ந்த பெருமாள்சாமி மகன் கண்ணன் (26), முனியசாமி மகன் சிவசூா்யா (23) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



