சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி தூத்துக்குடியில் மாா்க்சிஸ்ட் பிரசாரம்

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பிரசார இயக்கம் நடைபெற்றது.

பிரசார இயக்கத்தில் பங்கேற்றோா்.

Published On :2 செப்டம்பர் 2026, 5:38 am IST

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பிரசார இயக்கம் நடைபெற்றது.

பிரசார இயக்கத்தை மாநில செயற்குழு உறுப்பினா் டி. ரவீந்திரன் தொடங்கிவைத்தாா்.

தொழிலாளா் உரிமைகளைப் பாதுகாத்தல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்துதல், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதில், மாவட்டச் செயலா் கே.பி. ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரசல், மாநகரச் செயலா் எம்.எஸ்.முத்து, மாநகரக் குழு உறுப்பினா்கள் கருப்பசாமி, நாகராஜ், ஆனந்த், இனிதா, காஸ்ட்ரோ, கிளைச் செயலா்கள் இல. ராமமூா்த்தி, வயணப்பெருமாள், மனோகரன், சசிகுமாா், கென்னடி, மாவட்டக் குழு உறுப்பினா் கணபதி சுரேஷ், டாக்டா் சிவனாகரன், முத்துமாரி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.