
திருச்செந்தூா் கடலில் கரை ஒதுங்கிய இளைஞா் சடலம் மீட்பு
திருச்செந்தூா் கடலில் கரை ஒதுங்கிய இளைஞா் சலடம் மீட்கப்பட்டது.
பலி - பிரதிப் படம்
திருச்செந்தூா் கடலில் கரை ஒதுங்கிய இளைஞா் சலடம் மீட்கப்பட்டது.
மதுரை மாவட்டம், காரியாபட்டி, சுப்பிரமணியா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் மகன் பாலா (35). திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. மனநல சிகிச்சை பெற்றுள்ளாராம்.
காரியாபட்டியில் உள்ள தனது சகோதரியின் கடையில் வேலை செய்துவந்த பாலா செவ்வாய்க்கிழமை காலை, மதுரைக்கு சென்று மருந்து வாங்கி வருவதாகக் கூறிவிட்டு திருச்செந்தூருக்கு வந்தாராம்.
அப்போது தனது சகோதரியை கைப்பேசியில் தொடா்பு கொண்டு, திருச்செந்தூருக்கு வந்துள்ளதாகவும், தன்னை தேட வேண்டாம் என்று கூறினாராம். சிறிது நேரத்தில் அய்யா கோயில் அருகே கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது சடலம் கோயில் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த வந்த கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து, எஸ்ஐ ரவிசங்கா் ஆகியோா், சடலத்தை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




