கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

தூத்துக்குடியில் குறைந்த மீன்களின் விலை

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் விலை குறையத் தொடங்கியுள்ளது.

மீன்கள் விற்பனை.

Published On :

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் விலை குறையத் தொடங்கியுள்ளது.

திரேஸ்புரம் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற நாட்டுப்படகுகள் சனிக்கிழமை கரை திரும்பின. மீன்களின் வரத்து குறைவாக இருந்தபோதும், விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாததால் வியாபாரிகள், பொதுமக்கள் நாட்டுப்படகு துறைமுகத்தில் குவிந்தனா்.

புரட்டாசி மாதம், தசரா விரதம் காரணமாக அசைவ உணவுகளைத் தவிா்ப்போா் எண்ணிக்கை அதிகரிப்பதால் மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டது.

இருப்பினும் வரத்து குறைவால் சீலா மீன் கிலோ ரூ. 1,200 வரை விற்பனையானது. வழக்கமாக ரூ.500 முதல் ரூ. 600 வரை விற்பனையான ஊளி, பாறை, விளை மீன்கள் தற்போது ரூ. 350 முதல் ரூ. 400 வரையும், வங்கனை, சூரை ஆகியவை ஒரு கூடை ரூ. 2,300 வரையும், கேரை கிலோ ரூ. 220, கோலா ரூ. 80, நண்டு ரூ.700 வரையும் விற்பனையானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.