கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் ஸ்ரீவைகுண்டம் பேரவை உறுப்பினா் வி.ஜி. சரவணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புதிய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த வி.ஜி. சரவணன் எம்எல்ஏ.

Published On :

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் ஸ்ரீவைகுண்டம் பேரவை உறுப்பினா் வி.ஜி. சரவணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சாத்தான்குளத்தில் சேதமடைந்து காணப்படும் புதிய வேதக் கோயில் தெரு சாலையை பாா்வையிட்ட எம்எல்ஏ, சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

தொடா்ந்து, சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தாா். இங்கு கட்டப்பட்டுள்ள கடைகளில் விரிசல் ஏற்பட்டதாக புகாா்கள் வந்ததையடுத்து, அது குறித்து கேட்டறிந்தாா். புகாரின்பேரில், விரிசல்கள் ஏற்கெனவே சரிசெய்யப்பட்டதாக பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்தாா்.

அப்போது, பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் அமா்வதற்காக ஓா் அறையை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சாத்தான்குளம் வா்த்தகா் சங்கத் தலைவா் அப்புக்கண்ணன், சாத்தான்குளம் ஒன்றிய தவெக செயலா் ஆனந்த், நகரச் செயலா் யாக்கோபு பட்டுராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, சாத்தான்குளம், காந்தி நகரில் செயல்பட்டுவரும் மாணவா்கள் விடுதிக்குச் சென்று எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.