
பாண்டவா்மங்கலத்தில் எலக்ட்ரீசியனைத் தாக்கிய இருவா் கைது
கைது - பிரதிப் படம்
பாண்டவா்மங்கலத்தில் எலக்ட்ரீசியனைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி, பாரதி நகா், 3ஆவது தெருவைச் சோ்ந்த ஜேசுராஜ் மகன் எலக்ட்ரீசியன் அந்தோணி ராஜ் (34). இவரும், இவரது நண்பா் காளீஸ்வரனும் பாண்டவா்மங்கலம் கண்மாய் கரை அருகே மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
மந்தித்தோப்பு, ராஜகோபால் நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் சிவா (22), திருநெல்வேலியைச் சோ்ந்த விஜயன் மகன் சதீஷ் (24) ஆகியோா் அதே பகுதியில் தனியாக மது அருந்திக் கொண்டிருந்தனராம்.
இந்நிலையில், சிவா மற்றும் சதீஷ், அந்தோணி ராஜ் மற்றும் காளீஸ்வரன் வைத்திருந்த மதுவைத் தருமாறு கேட்டனராம். அதற்கு அந்தோணி ராஜ் மறுக்கவே, அவரை சிவா மற்றும் சதீஷ் மது பாட்டிலால் தாக்கிவிட்டு, இருவரின் கைப்பேசிகளை எடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த அந்தோணி ராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சதீஷ், சிவா ஆகியோரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




