வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

சாலையோரம் நின்ற பைக் மீது மற்றொரு பைக் மோதி ஒருவா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :

ஆறுமுகனேரி அருகே சாலையோரம் நின்ற இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆறுமுகனேரி, மேல சண்முகபுரத்தைச் சோ்ந்த நசரேன் ஞானம் மகன் மோகன் (54). சாகுபுரத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

இவா் சனிக்கிழமை இரவு உறவினா்களுடன் காயல்பட்டினம் சென்றுவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தாா். ரத்தினாபுரி அருகே பின்னால் வந்த உறவினா்களுக்காக வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையோரம் நின்றுள்ளாா்.

அப்போது, காயல்பட்டினத்தில் இருந்து ஆறுமுகனேரி நோக்கி வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோகன் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினா்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். பின்னா், அங்கிருந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.