பைக் மோதி காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழப்பு
தக்கலை அருகே சாலையை கடக்கும் போது இருசக்கர வாகனம் மோதி காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பலி
தக்கலை அருகே சாலையை கடக்கும் போது இருசக்கர வாகனம் மோதி காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தக்கலை அருகே திருவிதாங்கோடு மூன்றுமுக்கு சந்திப்பு பகுதியைச் சோ்ந்தவா் மலுக் முஹம்மது (73). இவா் கடந்த 2- ஆம் தேதி இரவு வீட்டின் அருகேயுள்ள சாலையை கடக்க முயன்றாராம். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி, அவா் பலத்த காயமடைந்தாா்.
உடனே அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு மலுக் முஹம்மது புதன்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து அவரது மகன் செய்யதுஅலி அளித்த புகாரின்பேரில், தக்கலை போலீஸாா், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த குளச்சல் பகுதியைச் சோ்ந்த முகமது அஸ்லாா் (20) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

