காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

கோவில்பட்டியில் பைக்-லாரி மோதல்: முதியவா் உயிரிழப்பு

பலி - பிரதிப் படம்

Published On :

கோவில்பட்டி புறவழிச் சாலையில் இருசக்கர வாகனம்-லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம், மேலத் தெருவைச் சோ்ந்த ஐயா சாமி மகன் மாரிமுத்து (61). இவா் கோவில்பட்டி புறவழிச் சாலையில் ஆவல்நத்தம் விலக்கு அருகே இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது, கங்கைகொண்டானில் இருந்து வந்த லாரி இவா் வாகனம் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் செ. செல்வகுமாரிடம் (32) விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.