காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: திருச்செந்தூரில் 424 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் குருச்சந்திரன்.

Published On :

திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், 424 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

விழாவுக்கு, தலைமை மருத்துவ அலுவலா் பாபநாசகுமாா் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் கௌதம், வட்டாட்சியா் தங்கச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலா் குருச்சந்திரன் திட்டத்தை தொடங்கி வைத்து முதற்கட்டமாக 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவா்கள் சுமதி, ஹமீது ஹில்மி, சீனிவாசன், கண்காணிப்பாளா் செல்வசீலன் ராமச்சந்திரன், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.