மன்னார்குடி, பிப். 27: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள பெருகவாழ்ந்தான் கால்நடை மருத்துவமûயில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
பெருகவாழ்ந்தானில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனை மூலம் பெருகவாழ்ந்தான், சித்தமல்லி, மண்ணுக்குமுண்டான், பாலையூர், செருகளத்தூர், தெற்குநாணலூர், கும்முட்டித்திடல், கெழுகத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கால்நடைகள் வளர்போர் பயனடைந்து வருகின்றனர்.
இப் பகுதியில் உழவு, கறவை மாடுகள், ஆடு, கோழி, வளர்ப்புப் பிராணிகள் என 10,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. அதனால், கால்நடை மருத்துவமனைக்கு நாள்தோறும் 150-க்கும் மேற்பட்ட கால்நடைகள், வளர்ப்புப் பிராணிகளை கொண்டு
வந்து சிகிச்சை அளித்து செல்கின்றனர்.
இங்கு உதவி கால்நடை மருத்துவர், ஆய்வாளர், இரண்டு பராமரிப்பு உதவியாளர்கள் என நான்கு பேர் பணியில் இருந்தனர். இதில் கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர், ஒரு பராமரிப்பு உதவியாளர் ஆகியோர் பணி மாறுதலில் சென்று விட்டனர். ஒரு பராமரிப்பு உதவியாளர் பணி ஓய்வு பெற்று விட்டார்.
இதனால் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் நீண்ட நாள்களாக நிரப்பப்படாமல் உள்ளன. மாதத்தில் பல நாள்கள் மருத்துவமனை பூட்டியே கிடக்கிறது.
இதனால், தாற்காலிகமாக திருமக்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவமனையிலிருந்து வாரத்திற்கு ஒரு இரு தினங்கள் உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என சுழற்சி முறையில் யாரேனும் ஒருவர் பெருகவாழ்ந்தான் வந்து, கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து செல்கின்றனர். யாரும் வராத நாள்களில் கால்நடைகளை சிகிச்சைக்காக கொண்டு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலையே ஏற்படுகிறது. அதனால், சில வேளைகளில் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், நாட்டு வைத்தியர்களை அணுக வேண்டியுள்ளது என்கின்றனர் இப் பகுதி மக்கள்.
மேலும், கால்நடை மருத்துவமனை கட்டடம் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், கட்டடத்தின் மேல் தளம் காரைகள் பெயர்ந்து, விழுந்து வருகின்றன. பலத்த மழை பெய்யும் சமயங்களில் மழை நீர் கசிவதுடன், கோப்புகள், மருந்து, மாத்திரைகளை பாதுகாப்பாக வைக்கவும் முடியாத நிலை உள்ளது.
எனவே, பெருகவாழ்ந்தான் கால்நடை மருத்துவமனையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதுடன், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்துக்கு பதிலாக அதே வளாகத்தில் மருத்துவர், அலுவலர் குடியிருப்பு உள்ளிட்ட வசதிகளுடன் புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் அமைய கால்நடை பாராமரிப்புத் துறையும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்திரை மாதப் பலன்கள் - ரிஷபம்
சித்திரை மாதப் பலன்கள் - மேஷம்

தவெக தேர்தல் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள்!

ஹரி இயக்கத்தில் அதர்வா?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

