புதுக்கோட்டை, ஜன. 8: புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் விளையாட்டுப் போட்டிகள் ஜன. 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பின் வரும் 13 ஒன்றியங்களில் ஊராட்சி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் தடகளம், கையுந்து பந்து, கூடைப் பந்து, கால் பந்து, வளைகோல் பந்து, கபடி, நீச்சல் ஆகிய போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது.
இந்தப் போட்டிகள் நடைபெறும் ஒன்றியம், பள்ளிகள் விவரம்:
அன்னவாசல் - இலுப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அறந்தாங்கி - ரத்தினக்கோட்டை செயின்ட் சார்ஜ் மெட்ரிக் பள்ளி, அரிமளம் - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆவுடையார்கோயில்- அரசு மேல்நிலைப்பள்ளி, கந்தர்வகோட்டை - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கறம்பக்குடி- அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குன்றாண்டார்கோவில் - கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமயம் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவரங்குளம் - ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பொன்னமராவதி - வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளி, மணமேல்குடி - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விராலிமலை - அரசு மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை - மாவட்ட விளையாட்டரங்கம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசு, சான்றிதழ் அளிக்கப்படும். மேலும், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.