மன்னார்குடி, ஜன. 27: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நகராட்சிக்கு சொந்தமான நான்கு பூங்காக்கள் சீரமைப்புப் பணிகள் முடிந்து, நான்கு ஆண்டுகளுக்கு மேலான நிலையிலும், பணியாளர்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளன.
மன்னார்குடி பாலகிருஷ்ணா நகரில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், முதல்முதலாக 1943ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பூங்காவிற்கு கல்கி ரேடியோ பூங்கா எனப் பெயரிடப்பட்டது.
இந்தப் பூங்காவில் நேரத்தை அறிவிக்கும் வகையில், தினசரி காலை 5 மணி, 9 மணி, நண்பகல் 1மணி, இரவு 9 மணி என நான்கு முறையும், காந்தியடிகள் இறந்த கிழமை, நேரத்தை குறிக்கும் வகையில் பிரதி வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணிக்கும் சங்கொலிக்க செய்யப்பட்டு, பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு இருந்து வந்தது. அதே ஆண்டில், கீழப்பாலத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி கே.எஸ். சுப்பிரமணிய ஐயர் நினைவு பூங்கா அமைக்கப்பட்டது. தொடர்ந்து, தெப்பக்குளம் மேல்கரையில் பி.ஆர்.எம். பூங்கா, மன்னை நகரில் முன்னாள் அமைச்சர் ப. நாராயணசாமி நினைவு பூங்கா, ஆனைவிழுந்தகுளம் பகுதியில் நேரு பூங்கா என நகரப் பகுதி மக்கள் பொழுதுபோக்கவும், குழந்தைகள் விளையாடும் இடமாகவும் பூங்காக்கள் இருந்தன.
முறையான பராமரிப்பு இல்லாததால், பூங்காக்களில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தன. இதனால், பூங்காவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதையடுத்து, பூங்காக்களில் செடிகள் மண்டின. சங்கொலி கருவியும் பழுது அடைந்ததால், அதன் சேவையும் நிறுத்தப்பட்டது. நகரில் இருந்த அனைத்துப் பூங்காக்களிலும் இதேநிலைதான்.
இந்நிலையில், 1993ஆம் ஆண்டு ராஜகோபால சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது, நகரில் இருந்த அனைத்து பூங்காக்களிலும் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டதுடன், சுற்றுச்சுவரும் கட்டப்பட்டது.
தொடர்ந்து, 2005ஆம் ஆண்டு பூங்காக்களை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் சார்பில் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடம் நிதி பெறப்பட்டது. இதில் கல்கி பூங்காவிற்கு ரூ. 5 லட்சமும், கே.எஸ்.எஸ் பூங்கா, மன்னை பூங்கா, பி.ஆர்.எம் பூங்கா ஆகியவற்றிற்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் என மொத்தம் ரூ. 8 லட்சம் நிதி பெறப்பட்டு, அனைத்துத் திட்டப் பணிகளும் ஒரே ஆண்டில் முடிக்கப்பட்டன. ஒப்பந்ததாரர்கள் பூங்காக்களில் சீரமைப்புப் பணிகள் முடித்து, அவற்றை நகராட்சி வசம் ஒப்படைத்து நான்கு ஆண்டுகள் ஆகியும், இதுவரையில் அந்த பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படாமல், பூட்டியே கிடக்கின்றன. புதுப்பிக்கப்பட்ட சங்கொலி கருவியும் இயக்கப்படாமலேயே உள்ளது.
இதனால், பூங்காக்களில் குழந்தைகளுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடிக்கும் நிலையில் உள்ளன. நடைப்பயிற்சிக்காக போடப்பட்ட நடைபாதை சேதமடைந்து உள்ளது. இதுமட்டுமல்லாது, பூச்செடிகள், மரங்கள் ஆகியவை பொலிவிழந்து, காட்டுச்செடிகள் போல் மண்டிக் கிடக்கின்றன.
பணியாளர்கள் பற்றாக்குறை:பூங்காக்கள் பராமரிப்பு என்பது நகராட்சி பொறியியல் பிரிவின் கீழ் வருகின்றன. இந்த பிரிவில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாததால்தான், பூங்காக்களை பூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
"காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள பொருள்கள் சேதமடையாத வகையில் இருக்கும் ஊழியர்களை கொண்டு, பராமரித்து பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வராமல்பூட்டியிருக்கும் நான்கு பூங்காக்களை திறக்க வேண்டும். மேலும், புதுப்பிக்கப்படாமல் உள்ள நேரு பூங்காவிற்கு தேவையான நிதியினை பெற்றுத் தர, நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்திரை மாதப் பலன்கள் - ரிஷபம்
சித்திரை மாதப் பலன்கள் - மேஷம்

தவெக தேர்தல் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள்!

ஹரி இயக்கத்தில் அதர்வா?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

