மதுக் கடைகளால் பொதுமக்கள் பாதிப்பு
கரூர், செப்.7: கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். தனியார் வசமி


கரூர், செப்.7: கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
தனியார் வசமிருந்த மது விற்பனையை கடந்த 2003-லிருந்து தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. இதன்மூலம், அரசுக்கு முக்கிய வருவாய் இனங்களில் ஒன்றாக மது விற்பனை ஆகிவிட்டது.
கரூர் மாவட்டத்தில் உள்ள 112 டாஸ்மாக் கடைகளில் 34 கடைகள் கரூர், இனாம்கரூர், தாந்தோன்றிமலை, குளித்தலை நகராட்சிப் பகுதிகளிலும், 78 கடைகள் கிராம, பேரூராட்சிப் பகுதிகளிலும் உள்ளன.
ஆண்டுதோறும் மது விற்பனை உயர்ந்து கொண்டே செல்வது மாவட்ட நிர்வாகத்தின் "சாதனை' யாகப் பார்க்கப்பட்ட போதிலும், மதுக் கடைகளால் பல்வேறு பிரச்னைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
பொதுமக்கள் வசிக்கும் பகுதி, வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், பொது இடங்களுக்கு அருகே மதுக் கடைகளை அமைக்கக் கூடாது என்ற விதி இருந்த போதும், நகராட்சி எல்லைக்குள் 28 கடைகள் இந்த விதியை மீறியே அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கடைகள் குறித்து பொதுநல அமைப்புகளும், பொதுமக்களும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
விதிகளை மீறி அமைக்கப்பட்ட கடைகளின் அருகிலேயே உள்ள மதுக் கூடங்களாலும் அப்பகுதி மக்கள் மிகுந்த மனநெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.
மதுக் கூடங்களில் மது அருந்துவோர் அந்த வழியாகச் செல்லும் பெண்களையும், மாணவிகளையும் கிண்டல் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து யாரிடம் புகார் தெரிவிப்பது என்ற வேதனை மட்டுமே அவர்களுக்கு மிஞ்சுகிறது.
தற்போது இந்நிலை மேலும் மோசமாகி, திறந்தவெளிகள், சாலையோரங்கள், ஒதுக்குப்புறங்களிலும் மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
பார்களில் விற்கப்படும் பொருள்களின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளதும், அவற்றின் தூய்மையின்மையும் குடிமகன்களை வெளியேற வைக்கிறது. இவ்வாறு வெளியேறும் அவர்கள் மதுக் கடைகளுக்கு அருகேயுள்ள பெட்டிக் கடைகளில் தேவைப்படும் பொருள்களை வாங்கி, அங்கேயே மதுவை அருந்திவிட்டுச் செல்கின்றனர்.
அப்போது மிஞ்சும் பொருள்கள், காலிப் பாட்டில்களை அவர்கள் வீசிச் செல்வதன் காரணமாக, அவற்றால் சாக்கடைகளில் அடைப்பு ஏற்படுகிறது.
தற்போது, சாலையோர மர நிழல்களில் அமர்ந்து மது அருந்தும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. அதேபோல, இரவு நேரத்தில் அடைக்கப்பட்ட கடைகளின் முன்னால் அமர்ந்து மது அருந்துவது, இருட்டுப் பகுதியில் கூட்டமாக அமர்ந்து மது அருந்துவதும் அதிகரித்துள்ளதால், இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே செல்வதே ஆபத்து என்ற நிலை கரூர் மாவட்டத்தில் உருவாகிவிட்டது.
இவ்வாறாக, கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மூலமாக நடைபெறும் விதிமீறல்களும், குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
இவற்றைத் தடுத்து நிறுத்தி, மக்களுக்குப் பாதுகாப்பான நிலையை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம், போலீஸôர், டாஸ்மாக் ஆகியவை இணைந்து தீர்வு காண முன் வர வேண்டும் என்பதே பொதுமக்கள். சமூக நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...