ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது வழங்கும் விழா

மணப்பாறை, ஏப். 27: திருச்சி மாவட்டம், மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளை சார்பில், ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது வழங்கும் விழா சனிக்கிழமை (ஏப். 30) சென்னை ராஜ் பவனில் நடைபெற உள்ளது.    மணப்பாறை செந்தமிழ் அ

மணப்பாறை, ஏப். 27: திருச்சி மாவட்டம், மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளை சார்பில், ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது வழங்கும் விழா சனிக்கிழமை (ஏப். 30) சென்னை ராஜ் பவனில் நடைபெற உள்ளது.

   மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளை சார்பில், மறைந்த சிறுகதை எழுத்தாளர் ஜெயந்தன் பெயரில் இந்த ஆண்டு முதல் படைப்பாளிகளுக்கு விருது வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

   அதையொட்டி, சென்னை ராஜ்பவனில் நடைபெறும் விழாவில், தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஜெயந்தனின் சிறுகதை, நாடகம், குறுநாவல் தொகுப்பு நூல்களை வெளியிடுகிறார்.

   இந்த நூல்களை ஜெயந்தனின் மனைவி நாகலட்சுமி ஜெயந்தன், அறக்கட்டளைப் பொருளாளர் கரு. ராசகோபாலன், செயலர் கோ. நவமணி சுந்தரராசன் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

   விழாவில் நாடக நூல் படைப்பாளிகள் தமிழ்மகன், வேலு சரவணன், முனைவர் பா.அ. முனுசாமி, நவீன கவிதைகள் நூல் படைப்பாளிகள் கடற்கரய், பொன். இளவேனில், அ. வெண்ணிலா, பா. சத்தியமோகன், சிறுகதைத் தொகுப்பு நூல் படைப்பாளிகள் விஜயமகேந்திரன், ஜனநேசன், உயிர்வேலி ஆலா ஆகியோருக்கு படைப்பிலக்கிய விருதுகளை ஆளுநர் வழங்குவார்.     படைப்பாளிகளைப் பாராட்டி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஆணையர் த. உதயச்சந்திரன், எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பா. செயப்பிரகாசம், கவிஞர் இளம்பிறை ஆகியோர் பேசுகின்றனர்.

   முன்னதாக, அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணவாளன் வரவேற்றுப் பேசுகிறார். நிறைவாக, அறங்காவலர் ஜெயந்தன் சீராளன் நன்றி கூறுகிறார். அறக்கட்டளை குறித்து நிறுவன அறங்காவலர் செüமா. ராசரத்தினம் அறிமுகவுரையாற்றுகிறார்.

   விழாவுக்கான ஏற்பாடுகளை செந்தமிழ் அறக்கட்டளை அறங்காவலர்கள் பாவலர் தாழை ந. இளவழகன், கவிஞர் த. இந்திரஜித், கவிஞர் மணவை தமிழ்மாணிக்கம், கவிஞர் மு.மு. அஸ்ரப் அலி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com