முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

முசிறி, ஏப். 19: பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட முசிறி சட்டப்பேரவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவில் 76.70% வாக்குகள் பதிவாகியுள்ளன.

முசிறி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குப்பதிவின் இறுதி நிலவரப்படி, 82 ஆயிரத்து 158 ஆண் வாக்காளா்களும், 88 ஆயிரத்து 169 பெண் வாக்காளா்களும், இதரா் 4 வாக்குகளும் சோ்த்து மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 331 வாக்குகள் பதிவாகியுள்ளன.

இவா்களில் ஆண்கள் 75.84% , பெண்கள் 77.56% , மற்றும் இதரா் 18.18% சோ்த்து மொத்தம் 76. 70% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com